தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர் - பெரம்பலூர் வாக்கு சாவடியில் திமுக தொண்டர்கள் குவிந்தனர்

பெரம்பலூர்: திமுக வேட்பாளரின் மகனை காவல்துறையினர் அடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர்
திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர்

By

Published : Dec 27, 2019, 5:12 PM IST

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக லஷ்மி பெரியசாமி போட்டியிட்டுள்ளார். இவரது மகன் குணால், செஞ்சேரி கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் வாக்குச் சேகரித்தாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் லத்தியால் அடித்ததில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர்
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திமுக ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள் திரண்டதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கென்னடி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தீவிரம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details