பெரம்பலூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழைத் தேடி என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நேற்று (மார்ச். 1) மதுரையில் பயணத்தை நிறைவு செய்தார். அதன்பின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழைத் தேடி பயணம் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சென்னை, சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் பரப்புரை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வந்தது.
இந்த தமிழைத் தேடி பயணம் நிகழ்ச்சியின் இறுதி நாள் பரப்புறையாக திருச்சியில் நேற்று முந்தினம் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் தமிழ் இல்லாதாதால் தமிழை தேடிய இப்பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள வர்த்தக வியாபார நிறுவனங்களில் பெயர் பலகைகள் 10 பாகமாக பிரித்து அதில் 5 பாகம் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் 3 பாகம், ஆங்கிலமும் மீதமுள்ள 2 பாகம் அவர்கள் விரும்பும் மொழி அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.