தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விழுக்காட்டில் பெரம்பலூர் முதல் இடம் - மாணவர்களுக்கு வாழ்த்துகூறிய கலெக்டர்! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிக்கல்வி துறையின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றியதால்தான் மாநிலத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றதாக ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா
செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா

By

Published : Jun 20, 2022, 4:25 PM IST

பெரம்பலூர்:12ஆம் வகுப்புபொதுத்தேர்வு முடிவுகளின்படி, பெரம்பலூர் மாவட்டம் 97.95 விழுக்காடு பெற்று தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவுரைகளை முழுமையாகப் பின்பற்றியதால்தான் இது சாத்தியமானதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுக்கு சென்ற 77 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்றுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா

மாநிலத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றதால் முதன்மைக்கல்வி அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார். இதனிடையே இந்த சாதனையை கல்வித்துறை அலுவலர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கொண்டாடிவருகின்றனர்.

இதையும் படிங்க:10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்- தனியார் பள்ளிகள் முதலிடம்

ABOUT THE AUTHOR

...view details