பெரம்பலூர்:ஆலத்தூர் வட்டம் தேனூர் கிராமத்திலுள்ள பயிர் அமைப்பு வளாகத்தில் "ஆலத்தூர் உழவுத் திருவிழா " என்ற கருத்தை வலியுறுத்தி உழவுத் திருவிழா தொடங்கியது. நேற்றும், இன்றும் என இரண்டு நாள்கள் நடைபெற்று வருகிறது. இந்த உழவுத் திருவிழாவில் இயற்கை முறையில் விளைவித்த தானியங்கள், காய்கறிகள், பழ விதைகள், மரக்கன்றுகள், கைவினைப் பொருள்கள், நஞ்சற்ற உணவு மற்றும் தின்பண்டங்கள், துணிப்பைகள் போன்றவை விற்பனை கடைகள் அமைக்கப்பட்டன.
மேலும் கிழங்கு வகைகள், நெல் ரகங்கள், கைவினைப் பொருள்கள், நலவாழ்விற்கான மருத்துவ முறைகள் மற்றும் நமது பகுதியின் பாம்புகள், மூலிகைகள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டன. தொடர்ந்து விதைகளே ஆதாரம், வீட்டுத் தோட்டம், பண்ணை வடிவமைப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வும், நலவாழ்விற்கான உணவும், வாழ்வியலும் சூழலும் மனித வாழ்வும், தற்சார்பு மேலாண்மை குறித்து கருத்தரங்கள் நிகழ்வு நடைபெற்றன.