பெரம்பலூரில் தூய்மையே சேவை முனைப்பியக்கத்தின் சார்பாக நெகிழியின் தீமை, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியைத் தடை செய்தல் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக் கொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தொடங்கிவைத்தார்.
500 மாணவர்கள் பங்கேற்ற நெகிழியின் தீமையை விளக்கும் விழிப்புணர்வுப் பேரணி - toxic plastic
பெரம்பலூர்: நெகிழியின் தீமை விளக்கும் விழிப்புணர்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
plastic ban
இப்பேரணியில் நெகிழியின் தீமை, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்டவற்றின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகப் பழைய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.