தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி மனு! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர்கள் சிலர் மனு கொடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

By

Published : Dec 14, 2020, 2:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் அரசு அனுமதியோடு, வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை கரோனா காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கலாமா? எனத் தமிழ்நாடு அரசு ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் மார்சல் ராயன் தலைமையில் இளைஞர்கள் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

ABOUT THE AUTHOR

...view details