பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அடைாளம் தெரியாத நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். பின்னர், முருகனை கத்தியை காட்டி மிரட்டி ஆன்லைனில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடியே 67 லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர். இது தொடர்பாக, முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர் பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பதும் இவர் கூலிப்படையினர் மூலம் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பெரம்பலூரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது குண்டர் சட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலூரில் முருகன் என்பவரை கடத்தி மிரட்டி, ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம்
இந்நிலையில், கூலிப்படையை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மனோகரனை கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, குண்டர் சட்டத்தின் கீழ் மனோகரனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.