தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலை செய்து கொள்வதாக மீன் வியாபாரி சமூக வலைதளங்களில் காணொலிப் பதிவு! - பெரம்பலூரில் மீன் வியாபாரிக்கு காவல் துறையினர் மிரட்டல்

பெரம்பலூர்: மீன் கேட்டு, காவல் துறையினர் மிரட்டியதால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மீன் வியாபாரி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீன் வியாபாரி காணொலி வைரல்
மீன் வியாபாரி காணொலி வைரல்

By

Published : Aug 3, 2020, 6:20 PM IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே கிராமத்தில் மீன் குட்டை அமைத்து மீன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 3) அவரது மீன் குட்டைக்குச் சென்ற குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் கதிரவன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் இலவசமாக மீன் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு ரமேஷ் மீன் தர மறுத்துப்பேசியுள்ளார். உடனே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரனும் காவல் துறையினருடன் சேர்ந்துக் கொண்டு, அவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளனர்.

மீன் வியாபாரி காணொலி வைரல்

இந்நிலையில் தன்னை மிரட்டிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details