தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி இன்று மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் சமூக அக்கறையுடன் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் முழு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கரோனா குறித்த வதந்திகளை நம்பி பொதுமக்கள் பயப்பட வேண்டாம். மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து இதுவரை வந்துள்ள 166 பேர் முழு கண்காணிப்பில் உள்ளனர்" என்றார்.