கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே உப்போடை பகுதியிலுள்ள மதுபான கடையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரம்பலூர் காவல் துறையினர் மோப்ப நாய் மூலம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருடு நடைபெற்ற மதுபானக் கடை இந்த விசாரணையின்போது, மதுபான கடையின் அருகில் காலி மதுபான பெட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, திருட்டு நடைபெற்ற மதுபான கடைக்கு அருகிலேயே டாஸ்மாக் குடோன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபானங்களைத் திருடி விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் கைது!