தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஆய்வு பணி வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக நாளை (டிச. 17) வருகை தர உள்ளார்.
முதலமைச்சர் வருகையின்போது ஆர்ப்பாட்டம்: கரும்பு விவசாயிகள் அறிவிப்பு - கரும்பு விவசாயிகள்
பெரம்பலூர்: சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
Sugarcane farmers protest
இந்நிலையில் முதலமைச்சர் வருகையின்போது பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம், டிராக்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் 2015 முதல் 2017ஆம் ஆண்டுக்கும் அதன்பிறகு வெட்டிய கரும்புக்கும் மாநில அரசு தரவேண்டிய பாக்கி தொகை ரூபாய் 27.31 கோடி ரூபாயை டிசம்பர் 31ஆம் தேதி 2020 ஆண்டுக்குள் ஒரே தவணையாக வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.