பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் இறையூர் சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் இன்று தொடங்கப்பட்டது. குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அரவையைத் தொடங்கிவைத்தனர்.
பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் ஏழாயிரத்து 203 ஏக்கர் பயிரிடப்பட்ட மொத்த கரும்பு மகசூலான சுமார் 2.10 லட்சம் டன், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டிற்கான அரவை பருவத்தில் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.