62ஆவது ஆண்டு மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில், 80மீ தடை தாண்டும் ஓட்டத்தில் அனு என்ற மாணவி வெள்ளிப் பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் பிரியதர்ஷினி என்ற மாணவி ஈட்டி எறிதலில் தங்கமும் வென்றனர்.
தடகளத்தில் தங்கம் வென்ற பெரம்பலூர் மங்கைகள் - மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி
பெரம்பலூர்: மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
![தடகளத்தில் தங்கம் வென்ற பெரம்பலூர் மங்கைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5148338-thumbnail-3x2-athlete.jpeg)
இதே போன்று 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் தன்யா, சிவாஸ்ரீ, மரியதர்ஷினி, ஆரோக்கிய எபிசியா டென்சி ஆகியோர் வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றனர். 19 வயதிற்குட்பட்ட 100 மீ தடை தாண்டுதல் போட்டியில் ஆர். சங்கீதா என்ற மாணவி வெண்கல பதக்கம் வென்றார். மேற்கூறிய மாணவிகள் அனைவரும் பெரம்பலூர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் அனு, பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மாணவிகள் தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயகுமாரி, தடகள பயிற்றுநர் கோகிலா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.