பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு இன்று (நவ.12) வருகை தந்த சிறப்பு காவல் துறை இயக்குனர் ராஜேஷ் தாஸ், அலுவலகத்தை ஆய்வு செய்து, காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், "தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதனால் பொதுமக்களிடையே கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டுபவர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அதேநேரத்தில், மக்களிடம் அன்பாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.