தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் என நான்கு ஒன்றியங்கள் உள்ளன.
டிசம்பர் 27-ஆம் தேதி பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களுக்கும், டிசம்பர் 30ஆம் தேதி வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வேப்பூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் உறுப்பு கல்லூரியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் உடும்பியம் பகுதியில் உள்ள ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.