தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழைத் தொடங்கிவிட்ட காரணத்தினால் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நேற்று (செப்.1) பாடநூலில் 83 மில்லி மீட்டர், லப்பை குடிகாடு 45 மில்லி மீட்டர், எறையூரில் 32 மில்லி மீட்டர், வேப்பந்தட்டைப் பகுதியில் 29 மில்லி மீட்டர், செட்டிகுளத்தில் 24 மில்லி மீட்டர், பெரம்பலூரில் 22 மில்லி மீட்டர், புதுவேட்டக்குடியில் 17 மில்லி மீட்டர், வி.களத்தூரில் 11 மில்லி மீட்டர், அகரம்சிகூரில் 8 மில்லி மீட்டர், கிருஷ்ணாபுரத்தில் நான்கு மில்லி மீட்ட,ர் தழுதாழைப் பகுதியில் மூன்று மில்லி மீட்டர் என மொத்தம் 278 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 25.27 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.