எதை செய்தாலும் இந்த உலகமே நம்மை உற்றுப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தான் இயந்திர உலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லது, கெட்டது எது என்பதை பார்க்கும் வயதில்லை, அனைத்தையும் ட்ரெண்டாக்கும் காலம் இது. நடிகர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டை போடும் ரசிகர்கள் மத்தியில், இதுபோன்ற நல்ல செய்திகளையும் ட்ரெண்டாக்கலாம் என்பதை பெரம்பலூர் காவல் துறை நிரூபித்துள்ளது.
காலத்திற்கேற்றார்போல் இளைஞர்களிடமும், மக்களிடமும் நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்க நகைச்சுவை உணர்வுடன் நல்ல கருத்துகளை மீம்ஸ் மூலம் வைரலாக்கி வருகிறது, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசம், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவலன் SOS-செயலி செயல்பட்டு வருகிறது.