பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றுமுதல் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரோனாவுக்கு டாட்டா: இனி திங்கள்தோறும் அது நடக்கும்! - Perambalur people's grievance meeting
பெரம்பலூர்: கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவரும் நிலையில், இன்றுமுதல் (பிப். 01) திங்கள்கிழமைதோறும் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர் கூட்டம்
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுவந்தது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் நலன்கருதி பிப்ரவரி 01ஆம் தேதிமுதல் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.