பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அகரம் சீகூர், வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இந்த வருடம் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை செய்து, கொள்முதலுக்காக அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து திறந்தவெளி கிடங்கில் சேகரித்து வைத்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.
ஆனால் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையத்திற்கு அலுவலர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டது.