தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்ன வெங்காயத்திற்கு வேர் அழுகல் நோய்: விவசாயிகள் வேதனை!

பெரம்பலூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயங்கள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

perambalur onion diseases

By

Published : Nov 3, 2019, 8:30 PM IST

விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மக்காச்சோளம், சின்னவெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர் பகுதியின் மண், தட்பவெட்பநிலை சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில் உள்ளதால் இப்பகுதியில் விளையும் சின்னவெங்காயத்திற்கு தனி மவுசு உண்டு.

பாடாலூர், செட்டிகுளம், ஆலத்தூர், சத்திரமனை, நாட்டார்மங்கலம், வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான மக்கள் சின்னவெங்காயம் சாகுபடி செய்கின்றனர். தற்போது பெய்த மழையால் சின்ன வெங்காய பயிர்களுக்கு வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சின்னவெங்காய பயிர்கள்

பல்வேறு மருந்துகள் தெளித்தும் வேர் அழுகல் நோயிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லையென்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் இணைந்து பயிர்களை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதன் மூலம் தங்களின் வாழ்வதாரத்தை காக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக மருத்துவரணி சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்!

ABOUT THE AUTHOR

...view details