2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, பெரம்பலூர் தொகுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தகுதியின் அடிப்படையில் இலவச உயர் கல்வி வழங்குவதாக அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, 2019-20ஆம் ஆண்டுக்கான முதல் பிரிவில் (batch) மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த ஆண்டும் (2020-21 ஆண்டு) பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர் கல்வி வழங்கப்படும் என பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.