தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல்: நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் - Nivar cyclone relief

பெரம்பலூர்: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர்.

Relief
Nivar cyclone

By

Published : Nov 25, 2020, 8:02 PM IST

நிவர் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதி, மண் குடிசை வீடுகள், தற்காலிக கொட்டகை அமைத்து தங்கியுள்ள உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மக்களை அந்தந்த கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிக்கட்டடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செஞ்சேரி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளி கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 48 நபர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு நிதி உதவியும் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து புயல், மழை நேரம் என்பதால் இரண்டு நாள்களுக்கு வெளியில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மேலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details