தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்காச்சோள பயிர்களை தாக்கும் படைப்புழு : விவசாயிகள் கவலை - warm attack

பெரம்பலூர்: படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளப் பயிர்கள் நாசமடைந்துள்ளதால், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மக்காச்சோளப் பயிர்கள்
மக்காச்சோளப் பயிர்கள்

By

Published : Nov 24, 2020, 10:41 AM IST

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்டதாகும். இங்கு பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

மாவட்டத்தின் கொட்டரை, ஆதனூர், குரும்பா பாளையம், மற்றும் குன்னம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளப் பயிர்கள் தற்போது அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலால் நாசமடைந்துள்ளன.

தற்போது மழைக்காலம் என்பதால் மேலும் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் பாதித்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பட்டுப்புழு வளர்ப்பு பாதிப்பு! விவசாயிகளின் நிலை பரிதாபம்!

ABOUT THE AUTHOR

...view details