பெரம்பலூர்:பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே. நகரைச் சேர்ந்த வினோத், பெரம்பலூர் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் காவல்துறையினர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது, இவர்கள் இருவரும் ஓராண்டு காலத்திற்கு பொது அமைதி காப்போம் என்று பிணையப் பத்திரத்தில் எழுதி கொடுத்து கோட்டாட்சியரிடம் பிணை பெற்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கரை அருகே ஹோட்டல் மாஸ்டரை கட்டையால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, நன்நடத்தை விதிகளை மீறியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பெரம்பலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.
பரிந்துரையை ஏற்ற பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் பத்மஜா, வினோத், தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், பெரம்பலூர் கிளைச் சிறையில் இருந்த வினோத், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையும் படிங்க:கேரள தங்கக் கடத்தல்; மார்ச் 12 ஆஜராக சபாநாயகருக்கு உத்தரவு