சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை 27, 29 ஆகிய தேதிகளில் மாநில அளவில் விளையாட்டு விடுதிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்த தடகளப் போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் ஒன்பது தங்கம், ஒன்பது வெள்ளி, இரண்டு வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவிலான தடகளப் போட்டி - பதக்கங்களை குவித்த பெரம்பலூர் மாணவிகள்! - பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள்
பெரம்பலூர்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் இருபது பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.
perambalur hostel students won the medals
மேலும், திருவண்ணாமலையில் கடந்த 26ஆம் தேதி நடந்த 17ஆவது தேசிய இளையோர்களுக்கான தடகளப் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி பவானி 400மீ ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு பயிற்றுநர் கோகிலா வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் வென்ற மதுரை சிறுவர்கள்!
TAGGED:
perambalur athalatic winner