தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.ஏ.ஏ.-வுக்கு ஆதரவாக பெரம்பலூரில் இந்து முன்னணியினர் போராட்டம் - BJP members CAA protest at Perambalur

பெரம்பலூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பெரம்பலூரில் இந்து முன்னணி சார்பில் தொடர் நாமாவளி போராட்டம் நடைபெற்றது.

BJP members CAA protest
Perambalur hindu munnani CAA protest

By

Published : Mar 4, 2020, 10:27 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்து முன்னணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, தொடர் நாமாவளிப் போராட்டம் ( தொடர் வலியுறுத்தல்) திருச்சி கோட்டச் செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது,

இந்தப் போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் 'வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்' என முழக்கங்களை எழுப்பி, பதாகைகளை கையில் ஏந்தியவாறு இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சி.ஏ.ஏ.-வுக்கு ஆதரவாக பெரம்பலூரில் இந்து முன்னணியினர் போராட்டம்

இதையும் படிங்க:'திமுகவின் கொ.ப.செ. நயன்தாரா... கி. வீரமணி இருக்கும்வரை திமுக உருப்படாது!' - ராதாரவி தாக்கு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details