பெரம்பலூர்: வேப்பந்தட்டை திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா - மணிமேகலை தம்பதியினர். இவர்களது மகள் மகாலட்சுமி (10). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்புப் படித்துவந்தார்.
இந்நிலையில், சிறுமி மகாலட்சுமி கடந்த ஆறாம் தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரிந்த அவரது தாய் மணிமேகலையும் உறவினர் மல்லிகா என்பவரும் சேர்ந்து சிறுமியைத் துன்புறுத்திச் சூடுவைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.