பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் ஜெய பாக்கியம் (வயது 13). இவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுஅதே பகுதியில் உள்ள சுப்ரமணியன் என்பவருக்குச் சொந்தமான வயலில் துணி துவைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுமியை சடலமாக மீட்டனர்.