பெரம்பலூர் மாவட்டம் பச்சை மலைத்தொடர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சித்தேரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்நிரம்பி உள்ளது.
தொடர் மழை;திடீர் அருவி;பொதுமக்கள் மகிழ்ச்சி - பெரம்பலூர் அருவி
பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக திடீரென உருவான அருவிகளால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
![தொடர் மழை;திடீர் அருவி;பொதுமக்கள் மகிழ்ச்சி water falls](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5260826-709-5260826-1575410800203.jpg)
மேலும் பச்சைமலைப் பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்த காரணத்தினாலும் ஏரியில் உடைப்பு ஏற்பட்டுஅரும்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனிடையே கோரையாறு அருகே உள்ள அய்யர் பாளையம் பகுதியில் பச்சைமலை தொடர் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீரென அருவிகள் உருவாகின. இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் வாசிகள் அங்கு சென்று உற்சாகமாக குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.