தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பட்ட விதைப்புகளில் தீவிரம் காட்டும் பெரம்பலூர் விவசாயிகள்! - ஆடிப்பட்ட விதைப்புகளில் தீவிரம் காட்டும் பெரம்பலூர் விவசாயிகள்

பெரம்பலூர்: ஆடிப்பட்ட விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Perambalur Farmers Starts adipatta vithaipu panikal
Perambalur Farmers Starts adipatta vithaipu panikal

By

Published : Jul 16, 2020, 5:20 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம், சிறு தானிய வகைகள் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு மழையை நம்பியே பெருவாரியான மானாவரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப ஆடி மாதம் இன்று (ஜூலை16) தொடங்கி இதையொட்டி மாவட்டத்தில் சின்ன வெங்காய விதைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக செட்டிகுளம், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர், குன்னம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் நிலத்தை உழுது பக்குவப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று பெரும்பாலான விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர். ஆடிப்பட்ட காலத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காயம் புரட்டாசி மாதத்தில் சாகுபடி செய்யப்படும்.

மேலும் எதிர்வரும் பருவமழை நன்றாக பெருந்தகை கொடுத்தால் மட்டுமே சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக அமையும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:வாழைத்தார்களின் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details