பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 35ஆவது நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவருக்கு மாலை அணிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 2015 முதல் 17 வரையிலான கரும்பு அரவை பருவத்திற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிலுவை வைத்துள்ள தொகையை வழங்க வேண்டும். கரும்பு சர்க்கரை ஆலைக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயம் திருகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்க! - மனிதநேய மக்கள் கட்சி புகார்
திருகல் நோய் பாதித்த சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தரமான நாட்டு சின்ன வெங்காயத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கரும்பு அரவை பருவத்திற்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக இந்தியா முழுவதும் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கலந்துகொள்ளும் எனவும் பெரம்பலூரில் உள்ள கடவுச்சீட்டு மையத்தை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.