தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்ன வெங்காயத்தை உலர வைக்கும் பணியில் விவசாயிகள்! - வெங்காயம் உலர வைக்கும் பணி

பெரம்பலூர்: பெய்து வரும் மழையினால் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் நனைந்துள்ளதால் தற்போது அதனை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

onion
onion

By

Published : Sep 2, 2020, 8:47 PM IST

விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பெருவாரியான நிலங்களில், பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பெரம்பலூரில் சின்ன வெங்காயத்திற்கு என்று தனி மவுசு உண்டு. அதனால் மாவட்டத்தில் பாடலூர், செட்டிகுளம், ஆலத்தூர், நாட்டார்மங்கலம், நக்கசேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு மொட்டு மொட்டாக வைத்து ஒரு வார காலத்திற்கு பின்பு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுச் செல்வர். இந்நிலையில், செட்டிகுளம் நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் நனைந்துபோனதால், அதனை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையில் வெங்காயம் நனைந்ததால், அதனை உலர வைத்து பட்டறைப் போடுவதற்கு தயார் படுத்துகின்றனர். அதற்கு முன்பு விவசாயிகள் பலர் சின்ன வெங்காயத்தை சாக்குப்போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நடவுப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 15 மூட்டை சின்ன வெங்காயம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details