தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தானே செங்கல் தயாரித்து வீடு கட்டும் பொறியியல் மாணவர்!

பெரம்பலூர் அருகே தானே செங்கலை தயாரித்து மண்ணை மட்டுமே கலவையாக்கி தற்சார்பு முறையில் வீடு கட்டி வருகிறார் பொறியியல் மாணவர் ஒருவர்.

தானே செங்கல் தயாரித்து வீடு கட்டும் பொறியியல் மாணவர்!
தானே செங்கல் தயாரித்து வீடு கட்டும் பொறியியல் மாணவர்!

By

Published : Jun 13, 2020, 9:42 PM IST

கரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய நிலையில், கட்டுமானப் பணிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

இந்நிலையில், இந்த கரோனா காலத்தை பயன்படுத்தி, தற்சார்பு வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்.

பெரம்பலூர் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், பாலிடெக்னிக் படித்த பின்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார்.

பின்னர் மேற்படிப்பு படிக்க விரும்பிய ஜெகன் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, தற்போது இறுதியாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இறுதியாண்டு புராஜெக்டை எப்படி முடிக்கலாம் என யோசித்து கொண்டிருக்கும் போது தனது வீட்டில் வெயில் காலத்தில் வேர்ப்பதையும் குளிர்காலத்தில் குளிரால் அவதிப்படுவதையும் உணர்ந்த அவர், தற்சார்பு முறையில் இரு கால நிலைக்கும் ஏற்ற வீட்டைக் கட்ட முடிவெடுத்துள்ளார்.

ஊரடங்கு பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை கொடுத்தாலும் ஒருசிலருக்கு புதிய சிந்தனைகளை தந்துள்ளது. அப்படி தங்களின் அன்றாட தேவைகளே நம்மை புது முயற்சி ஈடுபட வைத்து வெற்றியும் காண வைக்கும் என்பதை நிரூபித்து காண்பித்திருக்கிறார் பெரம்பலூர் பொறியியல் மாணவர்.

இதையும் படிங்க...ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு

ABOUT THE AUTHOR

...view details