தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு - perambalur eldermen accident

பெரம்பலூர்: சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு
வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

By

Published : Jan 24, 2020, 7:39 AM IST

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் அருகே சாய் பாபா கோவிலுக்குச் சென்றுவிட்டு சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முதியவரின் உடலைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த முதியவர் சாய் பாபா கோவிலுக்கு வந்தவரா? அவரது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details