பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு , மின் துறை பொறியாளர் அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்,
1. கரோனாவால் இறந்த மின் ஊழியர்களின் குடும்பத்திற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் வழங்குவது போல ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்.
2. கரோனா சிவப்பு மண்டல பகுதிகளில் 33% ஊழியர்களை மறு சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிட வேண்டும்
3. மின் வாரிய பொறியாளர், அலுவலர், ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றை மின்வாரியமே மொத்தமாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை ஏந்தி, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மின் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.