பெரம்பலூர்: அரும்பாவூர் அருகே பூலாம்பாடி பேரூராட்சியின் அதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் வினோத் (48). இவர் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் மீது பூலாம்பாடியைச் சேர்ந்த பெண் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளர் வினோத் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க சொன்னதாகவும் சம்பந்தப்பட்ட பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் நடத்திவரும் கம்பெனியை நடத்தவிட மாட்டேன் எனக் கூறியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.