தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளருக்கு கரோனா! - Corona positive case in perambalur district

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

By

Published : Jul 18, 2020, 1:12 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 17) ஒன்பது பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நேற்று (ஜூலை 17) உறுதிபடுத்தப்பட்ட ஒன்பது பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறை பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 168 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 31 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details