பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர் பெரிய ஏரியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி 1.4 கி.மீ தூரத்திலும் தடுப்புச் சுவர் நீளம் 73.50 மீ நீளத்திலும் மதகு பழுது பார்க்கும் பணி, எல்லைக்கல் நடும் பணி என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், குரும்பலூர் கிராமத்தில் தூர்வாரும் பணி 2 கி.மீ நீளத்திலும், தடுப்புச் சுவர் 39.00 மீ நீளத்திலும், எல்லைக்கல், மதகு பழுதுபார்த்தல் என ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.