தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி , விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்று பல கோடி பணம் விவசாயிகள் அல்லாதவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பணியிட மாற்றம் - மாவட்ட வேளாண் இணை இயக்குனர்
பெரம்பலூர்: பிரதம மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கணேசன் சேலத்திற்கு திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்திலும் 1,700 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 48 லட்சம் வரை முறைகேடாக பணம் பெறப்பட்டுள்ளது. அதில் 11 லட்சம் ரூபாய் திரும்பி பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பணிபுரிந்து வந்த கணேசன் சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய வேளாண் இணை இயக்குநராக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
வேளாண் துறை இணை இயக்குநர் தீடீர் பணியிட மாற்றம் வேளாண் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிசான் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் இந்த பணியிட மாற்றம் முக்கிய செயலாக கருதப்படுகிறது.