கரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விதிகளை மீறி சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறிபவர்களை எச்சரிக்க 'தண்டோரா' - corona virus
பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவை மீறி கடை திறந்தவர்கள், பொது இடங்களில் கூடியவர்களுக்கு "தண்டோரா" மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இன்று மாலை சில கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் பொது இடங்களில் கூட்டமாகக் கூடினர். அப்போது, ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் கூடக்கூடாது என்றும், மீறினால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் "தண்டோரா" மூலம் ஊராட்சி மன்ற அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர் குணமடைந்தார்'