தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின நிகழ்ச்சி

By

Published : Jun 12, 2020, 7:49 PM IST

பெரம்பலூர்: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி

இன்று, உலகக் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநலத்துறை, மகளிர் திட்டம், கலால் பிரிவு, கல்வித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் பங்குபெற்று குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மேலும், குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என்றும் அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க:ரூ.26 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details