பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா இப்பட்டியலை வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறுகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 818 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 50 ஆயிரத்து 625 பெண் வாக்காளர்கள், 17 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோல் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 115 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 95 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர்.