தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு பெரம்பலூர் ஆட்சியர் மரியாதை

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மாலை அணிவித்து மரியாதை
தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மாலை அணிவித்து மரியாதை

By

Published : Oct 10, 2022, 6:37 PM IST

பெரம்பலூர்: உலக நாடுகளின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்தியாவிற்கு தனி பெருமை உண்டு. இதில் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழிப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்ற போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தும் காந்தி சென்ற பாதையில் பின் தொடர்ந்து அவரோடு அகிம்சை வழியில் நடந்த போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றனர்.

அதேபோல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், INA எனப்படும் இந்திய ராணுவத்தை கட்டமைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை தொடங்கினார். அந்த INA படையில் சேர்ந்தவர் தான் தியாகி கிருஷ்ணசாமி.

இவர் ரங்கூன் படை பிரிவில் 16 வயதில் சேர்ந்து பணியாற்றி கொரில்லா படையில் முக்கிய தலைவராக விளங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போரின் காரணமாக மலேசியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிங்கப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்திலையில் தியாகி கிருஷ்ணசாமி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார்.

தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மாலை அணிவித்து மரியாதை

அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வருவாய் கோட்டாச்சியர் நிறைமதி சந்திரமோகன், வட்டாச்சியர் முத்துகுமார், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:பிளாட்பார்மில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details