பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது அவை, ஒருங்கிணைந்த பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டிலும் கிராம சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டிலும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு பணிகள் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கீழ் செங்குணம் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு! - perambalur collector santha
பெரம்பலூர்: ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் 11 பணிகள் ரூ. 1.53 கோடி மதிப்பீட்டிலும் நபார்டு திட்டத்தின் கீழ் சாலை, பாலங்கள் ரூ. 9.18 லட்சம் மதிப்பீட்டிலும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஐந்து பணிகள் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டிலும் மூலதன நிதி திட்டத்தின் கீழ் எட்டு பணிகள் ரூ. 1.23 கோடி மதிப்பீட்டிலும் மேற்படி பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:ஜீவானந்தத்தின் 113ஆவது பிறந்த நாள் - மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்