தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்பனா சாவ்லா விருது பெற்றவர்களை வாழ்த்திய ஆட்சியர் - விருது பெற்றவர்களை வாழ்த்திய ஆட்சியர்

பெரம்பலூர்: கல்பனா சாவ்லா விருது பெற்ற பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா வாழ்த்து தெரிவித்தார்.

 Perambalur Collector congratulates Kalpana Chawla Award recipients in the district
Perambalur Collector congratulates Kalpana Chawla Award recipients in the district

By

Published : Aug 17, 2020, 7:26 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நீரில் தத்தளித்த இரண்டு நபர்களை ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்கள் தங்களுடைய சேலையை வீசி காப்பாற்றினர்.

இவர்களின் வீர தீர செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது அறிவித்தது. இவர்களுக்கு நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 15) சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் "கல்பனா சாவ்லா விருது " வழங்கப்பட்டது

இந்நிலையில் விருது பெற்ற மூன்று பெண்களையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.

ABOUT THE AUTHOR

...view details