பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள பிரம்ம ரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆயிரத்து எட்டு மீட்டர் திரியில் பிரமாண்ட கொப்பரையில் நாளை (நவ. 29) தீபத் திருவிழா நடைபெற உள்ளது.
பிரம்ம ரிஷி மலையில் தீபத் திருவிழா - பொதுமக்களுக்கு அனுமதி ரத்து - கார்த்திகை தீபம்
பெரம்பலூர்: பிரம்ம ரிஷி மலையில் நடைபெற உள்ள தீபத் திருவிழாவிற்குப் பொதுமக்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Public Permission Canceled
இந்த ஆண்டு கரோனா வைரஸ் நோய்ப்பரவலை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கூட்டம் கூடுவதைத் தடுக்கும்வகையிலும், முகக்கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையிலும் குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பிரம்ம ரிஷி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது