தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பயணி, 3 மாடுகள் பலி! - AUTO BUS ACCIDENT

பெரம்பலூர்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரு பயணி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூன்று மாடுகளும் இந்த விபத்தில் பலியாகின.

பெரம்பலூர்

By

Published : May 1, 2019, 5:12 PM IST

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து வி.களத்தூர் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தொழுதூரிலிருந்து ஐந்து மாடுகளுடன் வந்த லோடு ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் லோடு ஆட்டோவில் இருந்த 5 மாடுகளில் மூன்று மாடுகள் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகின.

அதேபோல் தனியார் பேருந்தில் பயணித்த மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். லோடு ஆட்டோவில் வந்த ஓட்டுநர், உடன் வந்தவர்கள் காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக அந்த சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details