தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரங்களை வெட்டிய மூன்று வணிக வளாக உரிமையாளர்களுக்கு அபராதம்! - வணிக வளாகம் உரிமையாளர் அபராதம்

பெரம்பலூர்: நெடுஞ்சாலைக்கு சொந்தமான மரங்களை வெட்டி சேதப்படுத்திய மூன்று வணிக வளாக உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

tree
tree

By

Published : Sep 4, 2020, 3:07 PM IST

பெரம்பலூர் நகர்ப்புற பகுதியின் முக்கிய சாலையான வெங்கடேச புரம் பகுதியில் தங்களின் வணிக வளாகத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி பழமையான மூன்று மரங்களை உரிமையாளர்கள் வெட்டியுள்ளனர்.

வெட்டப்பட்ட மரங்களில் ஒன்று


இந்நிலையில், மரங்கள் வெட்டப்பட்டது குறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.
இதனிடையே நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சக்திவேல், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிக வளாக உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டிய மூன்று வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடப்பட்ட மரங்களை வெட்டி சேதப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சந்தன மரம் கடத்தலை அம்பலப்படுத்திய பெண் சுட்டுகொலை!

ABOUT THE AUTHOR

...view details