தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் 10 பவுன் நகை, பணம் திருட்டு! - பெரம்பலூர் க்ரைம் செய்திகள்

பெரம்பலூர்: பெருமாள் கோவில் தெருவில் பூட்டை உடைத்து பத்து பவுன் தங்கமும் பணமும் திருட்டியவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

perambalur 10 sovereign gold and 5 thousand cash stolen
பெரம்பலூரில் 10 பவுன் நகை, பணம் திருட்டு!

By

Published : Feb 19, 2020, 6:40 PM IST

பெரம்பலூர் மாவட்டம் எசனை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று (18/2/20) காலையில் வீட்டை பூட்டிவிட்டு ஊர்ப்புறப் பகுதியில் தனது பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார்.

கேட் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது

அதையடுத்து மாலை வீடு திரும்பியபோதுதான் வீட்டின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டதும், பீரோவில் உள்ள செயின், மோதிரம், ஜிமிக்கி, மூக்குத்தி என மொத்தம் பத்து பவுன் தங்க நகையும், 5 ஆயிரத்து 500 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீரோவில் இருந்து 10 பவுன் நகை, பணம் திருட்டு!

இதையும் படிங்க:கன்னியாகுமரி அருகே திமுக பிரமுகர் மளிகை கடையில் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details