பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் ”பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.